இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் அமைவதில் சிக்கல்

திருவொற்றியூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் அமைக்க தமிழக முதல்வர்

News image
Updated On :1 ஜூன் 2014, 11:13 pm

முகவை க.சிவக்குமார்

திருவொற்றியூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.  இருப்பினும் எவ்வித பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை. அதிகாரிகள் சிலர்  முட்டுக்கட்டை போடுவதே இதற்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.

திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரியை ஜூலை 11, 2012-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்ட இக் கல்லூரி அந்த ஆண்டே திருவொற்றியூர் தேரடி அருகே அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தாற்காலிகமாக செயல்பட தொடங்கியது. முதலாம் ஆண்டில் சுமார் 300 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் ஓராண்டுக்குள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கவும் உயர்கல்வித்துறை நடவடிக்கையைத் தொடங்கியது. 

அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்: தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) வசம் இருந்த நிலத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கல்லூரிக்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த சுமார் ரூ. 4 கோடி நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியது. ஆனால் கல்லூரி அமைய உள்ள இடத்தை கனிம நிறுவனத்திடமிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பதில் ஓராண்டுக்கும் மேலாக காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஜெயலலிதா உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உயர்கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, பொதுப்பணி துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டு கட்டடப் பணிகளுக்கு மட்டும் ரூ. 2.42 கோடிக்கு பணியாணை வழக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். ஆனாலும் 4 மாதங்களாகியும் எவ்வித பணிகளும் இந்த இடத்தில் தொடங்கப்படவில்லை.

முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள்: பணிகள் தொடங்கப்படாதற்கு தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முட்டுக் கட்டை போடுவதே காரணம் எனப் புகார் கூறப்படுகிறது. இந்த நிலம் தங்கள் துறைக்குச் சொந்தமானது எனவும், மேலும் மதிப்பு வாய்ந்த கார்னெட் மணல் வளம் இதில் இருப்பதால் இதனை கல்லூரி கட்ட ஒப்படைக்க முடியாது எனக் கூறிய கனிம நிறுவன அதிகாரிகள் இடத்தின் நுழைவு வாயிலைப் பூட்டி வைத்துள்ளனர். மேலும் இந்த இடத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனர். முதல்வர் அடிக்கல் நாட்டியும் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதால் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல்: தற்போது தாற்காலிகமாக செயல்படும் இடத்தில் வகுப்பறைகள் பற்றாக்குறை இருப்பதால், மாற்று ஏற்பாடாக இரண்டு ஷிப்டுகளாக கடந்த ஓராண்டாக கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் மூன்றாவது ஆண்டாக மாணவர்கள் சேர்க்கை இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் தலையிடக் கோரிக்கை: இப்பிரச்னை குறித்து வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பு நிர்வாகி ஜி.வரதராஜன் கூறியது,

திருவொற்றியூரில் அரசு கல்லூரி அமைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி வந்த தொடக்கத்திலேயே கல்லூரியைத் தொடங்கி வைத்து, கட்டடத்திற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளார். ஆனால் இதற்கு உறுதுணையாகச் செயல்பட வேண்டிய அதிகாரிகளே முட்டுக் கட்டையாக இருந்து தடங்கலாக இருப்பது வருத்தமளிக்கிறது.  தாற்காலிக இடத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியில் மாணவர்களுக்கு இடவசதி இல்லை என்பது தொடர்புடைய அதிகாரிகள் அறிவார்கள்.

எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மூன்றாவது ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கும் மாற்று ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்றார் வரதராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.