‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஐந்து ரூபாய் மருத்துவர் எஸ். ஜெயச்சந்திரன் காலமானார்

வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் (68) புதன்கிழமை காலமானார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் (68) புதன்கிழமை காலமானார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அவர் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 
காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்துக்கு அருகில் உள்ள கொடைப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ஜெயச்சந்திரன் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மண்ணடியில் பள்ளிப் படிப்பையும் லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., படிப்பையும் முடித்தார். இதைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் அவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். 
45 ஆண்டுகால சேவையில் மக்கள் மருத்துவர்: மருத்துவம் படித்து முடித்தவுடன் 1971-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை எளிமையான கட்டமைப்பில் தொடங்கினார். தொடக்கத்தில் இலவசமாகவே மருத்துவம் பார்க்கத் தொடங்கிய ஜெயச்சந்திரன் அதன் பின்னர் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தார். காலப்போக்கில் அது ஐந்து ரூபாயாக மாறியது. சிச்சைக்காக வரும் நோயாளிகள் தாமாக முன்வந்து தந்தால்தான் அதையும் பெற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.
கைராசி மருத்துவர் என பெயர் பெற்ற ஜெயச்சந்திரன் பல கிராமங்களுக்குச் சென்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். 
மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரு மகன்கள், மகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே மருத்துவர்கள். அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது.
துணைமுதல்வர் இரங்கல்: டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் அஞ்சலி: மறைந்த ஜெயச்சந்திரனின் உடலுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், தொழிலதிபர் வரதராஜன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.