இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஐந்து ரூபாய் மருத்துவர் எஸ். ஜெயச்சந்திரன் காலமானார்

வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் (68) புதன்கிழமை காலமானார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் (68) புதன்கிழமை காலமானார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அவர் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 
காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்துக்கு அருகில் உள்ள கொடைப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் ஜெயச்சந்திரன் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மண்ணடியில் பள்ளிப் படிப்பையும் லயோலா கல்லூரியில் பி.எஸ்சி., படிப்பையும் முடித்தார். இதைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் அவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். 
45 ஆண்டுகால சேவையில் மக்கள் மருத்துவர்: மருத்துவம் படித்து முடித்தவுடன் 1971-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை எளிமையான கட்டமைப்பில் தொடங்கினார். தொடக்கத்தில் இலவசமாகவே மருத்துவம் பார்க்கத் தொடங்கிய ஜெயச்சந்திரன் அதன் பின்னர் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சையளித்து வந்தார். காலப்போக்கில் அது ஐந்து ரூபாயாக மாறியது. சிச்சைக்காக வரும் நோயாளிகள் தாமாக முன்வந்து தந்தால்தான் அதையும் பெற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.
கைராசி மருத்துவர் என பெயர் பெற்ற ஜெயச்சந்திரன் பல கிராமங்களுக்குச் சென்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். 
மறைந்த ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரு மகன்கள், மகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே மருத்துவர்கள். அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது.
துணைமுதல்வர் இரங்கல்: டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள் அஞ்சலி: மறைந்த ஜெயச்சந்திரனின் உடலுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், தொழிலதிபர் வரதராஜன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.