
சென்னை, அரும்பாக்கத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை அமைந்தகரை என்.எஸ்.கே. நகர் 14-ஆவது தெருவைச் சேர்ந்தவர் திலீப் குமார்(34). இதே பகுதியில் 17-ஆவது தெருவில் வசிப்பவர் கார்த்திக் (25). கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி இரவு கார்த்திக் சகோதரி லதாவின் மகன் ஹரியை (12) தனது நண்பருடன் சேர்ந்து திலீப்குமார் தாக்கியுள்ளார்.
இதுபற்றி ஹரி தனது மாமா கார்த்திக்கிடம் கூறியுள்ளார். இதையடுத்து கார்த்திக் திலீப்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து அமைந்தகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து திலீப் குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்திக் செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பருடன் திலீப் குமார் வீடு இருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த திலீப் குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
பலத்த காயமடைந்த திலீப் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த கொலை தொடர்பாக அமைந்தகரை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




