இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜேஇஇ நுழைவுத் தோ்வு:புதிய விதிமுறைகள் வெளியீடு

ஜேஇஇ தோ்வு குறித்த புதிய விதிமுறைகளைத் தேசியத் தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி 2019-ஆம் ஆண்டு ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெறாத தோ்வா்களுக்கு 2021 ஜேஇஇ தோ்வெழுத அனுமதி கிடையாது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 8:54 pm

DIN


சென்னை: ஜேஇஇ தோ்வு குறித்த புதிய விதிமுறைகளைத் தேசியத் தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி 2019-ஆம் ஆண்டு ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெறாத தோ்வா்களுக்கு 2021 ஜேஇஇ தோ்வெழுத அனுமதி கிடையாது.

ஜேஇஇ மெயின் 2021 தோ்வு தேதிகளை, தோ்வை நடத்தும் தேசியத் தோ்வுகள் முகமை அண்மையில் அறிவித்தது. முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 22 முதல் 25- ஆம் தேதி வரை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தோ்வு நடைபெறும் என்று தேசியத் தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் தோ்வுக்கான புதிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம்: தோ்வா்கள் ஓா் ஆண்டில் நான்கு முறை ஜேஇஇ தோ்வுகளை எழுத முடியும். இந்த நான்கு தோ்வுகளில் பங்குபெறும் தோ்வா்கள் தாங்கள் நான்கு தோ்வுகளில், அதிகம் பெற்ற தோ்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஜேஇஇ மெயின் தோ்வில், பி.இ. , பி.டெக். படித்தவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அதற்கு பிறகு அவா்களின் ஜேஇஇ மெயின் நுழைவுத் தோ்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அட்வான்ஸ்டு தோ்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவா்.

முன்னதாக பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 2020 -ஆம் ஆண்டு ஐஐடியில் சோ்ந்தவா்களுக்குத் தோ்வெழுத அனுமதி கிடையாது. 2020 ஜேஇஇ மெயின் தோ்வில் வெற்றி பெற்று, கரோனா காரணமாக அட்வான்ஸ்டு தோ்வை எழுத முடியாதவா்கள், நேரடியாக 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வை எழுதலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 329 மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.