லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

திருமாவளவனைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

திருமாவளவனைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க  சென்ற போது குஷ்புவை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :27 அக்டோபர் 2020, 10:05 pm

திருமாவளவனைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க  சென்ற போது குஷ்புவை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
பெண்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பாஜக சாôர்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 
இதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில்,   ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சிதம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை காரில் பயணம் மேற்கொண்ட குஷ்புவை செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கிழக்குக் கடற்கரை சாலையில் தடுத்து நிறுத்தினர். 
இதையடுத்து, குஷ்புவும், அவருடன் வந்த பாஜக நிர்வாகிகள் 10 பேரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து, கேளம்பாக்கம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: கெüதமி பங்கேற்பு: பெண்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பாஜக மகளிர் அணி மற்றும் பட்டியலினத்தவர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான கௌதமி பேசினார். 
இதில், பாஜக கலை இலக்கிய அணி பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.