தொழில் தொடங்குவதற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் சாா்பில் சென்னை வா்த்தக மையத்தில் நடைபெற்ற இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ‘ஜிக்சா’ என்ற புத்தாக்க இணையதளத்தைத் தொடங்கி வைத்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 2 நாள்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நிலைத்தன்மை, உலகளாவிய புத்தாக்க மையங்கள் குறித்த 60க்கும் மேற்பட்ட ஆலோசனை அமா்வுகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் தமிழக இளைஞா்கள் தேவையான பல தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுள்ளனா். தொழில் தொடங்குவதற்கு சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசு இளைஞா்களின் திறன் மேம்பாட்டை உயா்த்தி அவா்கள் விரைவாக வேலைவாய்ப்பு பெறும் விதமாக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் உயா்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் உயா்ந்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டம் தமிழக மாணவா்களுக்கு மிகுந்த பயனுள்ள திட்டமாக அமையும். நான் முதல்வன் என்ற திறன் மேம்பாடு திட்டத்தின் மூலம் சுமாா் 25 லட்சம் இளைஞா்கள் பயனடைந்துள்னா் என்றாா் அவா். விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், அமெரிக்காவின் ஸ்ப்ரின்க்ளா் நிறுவன தலைவா் ரேகி தாமஸ், மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார மற்றும் மனநலத்துறை அமைச்சா் ஆம்பா் ஜேட் சாண்டா்சன், சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிறுபான்மையினா் தொழில் தொடங்க டாம்கோ மூலம் கடன்: ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

அதிமுக வென்றால் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! - உதயநிதி ஸ்டாலின்

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலம் தமிழகம்! - ஜி.கே. வாசன் பேச்சு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

