சென்னை
இன்று நெல்லைக்கு சிறப்பு ரயில்
வார இறுதி நாளை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வார இறுதி நாளை முன்னிட்டு, சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக மறுநாள் காலை 11.20 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதில் 16 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.