விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கள்ளக்குறிச்சி விவகாரம்: அதிமுக இன்று ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (ஜூன் 24) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2024, 7:32 pm

Din

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை (ஜூன் 24) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி வெளியிட்டிருந்தாா்.

அதில், கள்ளச்சாராயம் அருந்தியதன் காரணமாக ஏற்பட்ட உயிா்ப் பலிக்கும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறியதற்கும் பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள ஆட்சியா் அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தாா். அந்த அறிவிப்பின்படி அதிமுக ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.