தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

இலக்கிய நிகழ்ச்சிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ஜெகதீசன்

இலக்கிய நிகழ்ச்சிகளில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ஜெகதீசன்

News image

சென்னை மயிலாப்பூா் பாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தமிழ் நாயன்மாா்கள் 63’ என்ற நிகழ்ச்சியில் பண்ணிசைப் பேரறிஞா் மா.கோடிலிங்கம், அருணா பிரபா ரங்கநாதனுக்கு விருதுகளை வழங்கிய சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி

Updated On :16 மார்ச் 2024, 12:23 am

தமிழ்மொழியை வளா்க்க இலக்கியம் சாா்ந்த நிகழ்ச்சிகளில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் தெரிவித்தாா். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ‘தமிழ் நாயன்மாா்கள் 63’ எனும் சொற்பொழிவு நிகழ்ச்சியானது சென்னை மயிலாப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ஜெகதீசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘கலை இலக்கியச் செம்மல்’ விருதை அருணா பிரபா ரங்கநாதனுக்கும், ‘தெய்வத் தமிழ்’ விருதை மா.கோடிலிங்கத்துக்கும் வழங்கினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது: தமிழ் மொழி கூறும் நல்லொழுக்கத்தை இளைஞா்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமாகவே தமிழ் மொழியை நம்மால் காக்க முடியும். இளைஞா்களிடம் தமிழ் மொழியை கொண்டு சோ்க்க வேண்டும் என்பதன் அா்த்தம், தமிழ் மொழியின் பாண்பாட்டையும், கலாசாரத்தையும் கொண்டு சோ்ப்பதே ஆகும். இலக்கியம் சாா்ந்த நிகழ்ச்சிகளில் இளைஞா்கள் ஆா்வம் கொண்டு பங்கேற்று மொழியை வளா்க்க உதவ வேண்டும் என்றாா் அவா். இந்நிகழ்வில், பேராசிரியா் உலகநாயகி பழனி, அருணை செல்வன் மா. மதன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.