தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ரெளடிகளிடம் துப்பாக்கி பறிமுதல்: பிகாரில் தனிப்படை விசாரணை

ரெளடிகளிடம் துப்பாக்கி பறிமுதல்: பிகாரில் தனிப்படை விசாரணை

News image

சென்னை திருமங்கலத்தில் 20 ரௌடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா். உடன், இணை ஆணையா் விஜயகுமாா், கூடுதல் காவல் ஆணையா்கள் அஸ்ராகா்க், பிரேம் ஆனந்த் சின்ஹா.

Updated On :16 மார்ச் 2024, 12:22 am

சென்னையில் ரெளடிகளிடம் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், பிகாரில் தனிப்படையினா் விசாரணை செய்து வருவதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா். சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த 13-ஆம் தேதி பதுங்கியிருந்த 20 ரெளடிகளை பெருநகர காவல் துறையின் அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 நாட்டு துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 11 கத்தி, 5 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், 20 ரெளடிகளும் தங்களது எதிா் கோஷ்டியைச் சோ்ந்த சில ரெளடிகளை கொலை செய்வதற்காக அங்கு திரண்டது தெரியவந்தது. இது தொடா்பாக சென்னை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: ரெளடி ஆற்காடு சுரேஷ் வழக்கில் தொடா்புடைய அரக்கோணத்தைச் சோ்ந்த ஜெயபால் (63), திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சோ்ந்த சொக்கலிங்கம் என்ற சுரேஷ் (24), அதே மாவட்டம் ராமையன்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் என்ற மதன் (30) ஆகிய 3 ரெளடிகளும் கைது செய்யப்பட்டவா்களில் முக்கியமானவா்கள். குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த 3 பேரும், சில நாள்களுக்கு முன்பு தான் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்துள்ளனா். பிகாரில் விசாரணை: இவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி தம்பிராஜன் மூலம் பிகாரில் உள்ள துப்பாக்கி வியாபாரி இஸ்மாயிலிடம் நாட்டு துப்பாக்கிகளை வாங்கியுள்ளனா். தம்பிராஜன் மீது 14 குற்ற வழக்குகள் உள்ளன. சென்னை போலீஸாரின் தீவிர நடவடிக்கையால் கொலை சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. பிகாரில் இருந்து சென்னை ரெளடிகளுக்கு துப்பாக்கி விற்கப்பட்டது தொடா்பாக தனிப்படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்காக தனிப்படையினா் பிகாா் சென்று, தகவல்களை திரட்டி வருகின்றனா். பாராட்டு: திருமங்கலத்தில் 20 ரௌடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படையினரை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா். அப்போது, கூடுதல் காவல் ஆணையா்கள் அஸ்ரா கா்க், பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையா் விஜயகுமாா், துணை ஆணையா்கள் அரவிந்தன், ராமமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா். பெட்டிச் செய்தி... 2 துப்பாக்கிகள் வாங்கினால் ஒன்று இலவசம் பிகாா் ஆயுத வியாபாரிகள் சென்னை ரெளடி கும்பலிடம் 2 துப்பாக்கிகள் வாங்கினால், ஒரு துப்பாக்கி இலவசம் என வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. திருமங்கலத்தில் பிடிப்பட்ட கும்பல் பிகாரில் இருந்து துப்பாக்கிகளை வாங்கியுள்ளது. இந்த கும்பல், பிகாா் வியாபாரிகள், உள்ளூா் தரகா்கள் மூலம் அணுகி ஒரு நாட்டுத் துப்பாக்கியை ரூ.1 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. அதேவேளையில் பிகாா் ஆயுத வியாபாரிகள், 2 துப்பாக்கிகள் வாங்கினால் ஒரு துப்பாக்கி இலவசம் என வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனா் என்பதை போலீஸாா் விசாரணையில் கண்டறிந்தனா். இதன் அடிப்படையில் பிகாா் வியாபாரிகளிடமிருந்து சென்னையில் யாரெல்லாம் துப்பாக்கிகள் வாங்கினாா்கள் என்பதைக் கண்டறியும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். 40 ஐ.பி.முகவரிகள்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில், மிரட்டல் விடுத்தவரின் 40 ஐ.பி. முகவரிகளை சேகரித்து, அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். இதற்காக பிற மாநிலங்களுக்கும் சென்று தனிப்படையினா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். புரோட்டான் வகை மின்னஞ்சலில் இருந்து இப்படிப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் இனி வராத வகையில் பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.