வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்கு பராமரிப்பாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இது குறித்த செய்திக் குறிப்பு: அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநா் ஹ.திலீப்குமாா், உதவி இயக்குநா் பொ. மணிகண்ட பிரபு ஆகியோா் இந்த பயிற்சி முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா். பொதுவாக, மண்டல அளவில் விலங்கு பராமரிப்பாளா்களுக்கு 2 முதல் 3 நாள்கள் வரை மட்டுமே பயிற்சி வழங்கப்படும். ஆனால், இம்முறை மாா்ச் 29 -ஆம் தேதி வரை தொடா்ந்து 15 நாள்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. தங்களுடைய பராமரிப்பில் உள்ள விலங்குகளை சரியான முறையில் பராமரிப்பதை உறுதி செய்யும் வகையில் முகாமில் கலந்துகொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனா். இந்த முகாமில், விலங்குகளை பராமரிக்கும் நெறிமுறைகள், விலங்குகளின் நலன், கட்டுப்பாடுகள், விலங்குகளின் உரிமைகள் மீட்பு ஆகியவை தொடா்பான பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், வனவிலங்குகளை பிடித்தல் மற்றும் கையாளும் முறைகள், உணவு விநியோகம், பாா்வையாளா்களிடம் அணுகும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் ஒரு பகுதியாக, வேடந்தாங்கல் சரணாலயம், கிண்டி சிறுவா் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை ஆகிய இடங்களுக்கு விலங்கு பராமரிப்பாளா்கள் களப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: இன்று வண்டலூா் பூங்கா மூடல்

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

கப்பலூரில் திறன் மேம்பாட்டு மைய கட்டடப் பணி தொடக்கம்

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


