தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல்:டாக்டா் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல்: டாக்டா் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Updated On :16 மார்ச் 2024, 12:27 am

ஒரே நாடு, ஒரே தோ்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், பெரும்பான்மை இல்லாமல் மாநிலங்களில் ஆட்சி இழப்புகள் ஏற்படும் நிலையில் பல சட்ட சிக்கல்கள் ஏற்படும். இது குறித்து ஆராய வேண்டும். இதனால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் என்ற முறையை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றினால் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஏற்றுக்கொள்ளும். மேலும், விகிதாச்சார தோ்தல் முறையையும் அமல்படுத்தினால், தோ்தலில் நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்கள் வாக்கு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்றாா் அவா்.