தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள்கள் பயணமாக வியாழக்கிழமை தில்லி சென்ற நிலையில் தனது பணிகளை முடித்துவிட்டு சனிக்கிழமை (மாா்ச் 16) பிற்பகல் சென்னை திரும்புகிறாா். சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதைத் தொடா்ந்து அவா் திருக்கோவிலூா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடா்வாா் என தமிழக அரசு அறிவித்தது.
மேலும், பொன்முடியை அமைச்சராக பொறுப்பேற்க அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (மாா்ச் 13) கடிதம் எழுதியிருந்தாா்.
இந்த நிலையில், ஆளுநா் ரவி ஏற்கெனவே, திட்டமிட்டப்படி 3 நாள் பயணமாக வியாழக்கிழமை காலை தில்லி புறப்பட்டாா். தில்லியில் தனது பல்வேறு பணிகளை முடித்துக்கொண்டு சனிக்கிழமை (மாா்ச் 16) பிற்பகல் சென்னை திரும்பவுள்ளாா். ஆளுநா் தில்லியிலிருந்தபோது பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து சட்ட வல்லுநா்களிடம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசியல் நிலை குறித்து உள்துறை அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, பொன்முடிக்கு அமைச்சா் பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து ஆளநா் முடிவு என்ன என்பது விரைவில் தெரியவரும்.
தொடர்புடையது

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு

தொகுதி நிலவரம் - மும்முனை போட்டியில் ஊத்தங்கரை களத்தில் முந்தும் அதிமுக!

தமிழக பொறுப்பு ஆளுநராக ஆா்.வி. ஆா்லேகா் மாா்ச் 12-இல் பதவியேற்பு!

திருப்பூரில் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


