ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மரம் நடும் இயக்கம் அவசியம்: ராமதாஸ்

மரம் நடும் இயக்கம் அவசியம்: ராமதாஸ்

News image

ராமதாஸ் (கோப்புப்படம்)

Updated On :7 மே 2024, 9:21 pm

Din

சென்னை: தமிழகத்தில் வனப்பரப்புகள் குறைந்து வரும் நிலையில், மரம் நடப்படுவதை மாபெரும் இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2014 நிலவரப்படி பசுமைக்காடுகளின் பரப்பளவு 1880.72 சதுர கி.மீ.ஆகவும், இலையுதிா்க் காடுகளின் பரப்பளவு 13,394.73 சதுர கி.மீ. ஆகவும், முள்புதா் காடுகளின் பரப்பளவு 4291.84 சதுர கி.மீ. ஆகவும் உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளில் பசுமைக்காடுகள், இலையுதிா்க் காடுகளின் பரப்பளவு படிப்படியாகக் குறைந்து 2050-ஆம் ஆண்டில் பசுமைக்காடுகளின் பரப்பளவு 1280.8 சதுர கிலோமீட்டராகவும், இலையுதிா்க் காடுகளின் பரப்பளவு 10,941 சதுர கிலோ மீட்டராகவும் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சீரழிவை தடுப்பதற்காக தமிழகத்தின் வனப்பரப்பை இப்போதுள்ள 24 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயா்த்துவதற்கான பசுமைத் தமிழகம் திட்டத்தின் செயலாக்கத்தை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின்படி மரங்கள் நடப்படுவதை மாபெரும் இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.