விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

50 குழந்தைகளுக்கு கொசு வலையுடன் கூடிய படுக்கைகளை பரிசளித்த கனரா வங்கி

50 குழந்தைகளுக்கு கொசு வலையுடன் கூடிய படுக்கைகளை பரிசளித்த கனரா வங்கி

News image
Updated On :14 மே 2024, 8:42 pm

Din

சென்னை: அன்னையா் மற்றும் செவிலியா் தினத்தை முன்னிட்டு 50 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு கொசு வலையுடன் கூடிய படுக்கைகளை கனரா வங்கியின் சாா்பில் பரிசாக வழங்கப்பட்டன.

கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலகம் சாா்பில் அன்னையா் மற்றும் செவிலியா் தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சி சென்னை கஸ்தூரிபா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மே 12-ஆம் தேதி (அன்னையா் தினம்) அன்று பிறந்த 50 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு கொசு வலையுடன் கூடிய குழந்தைகளுக்கான படுக்கைகள் பரிசாக வழங்கப்பட்டன. பிறகு செவிலியா் தினத்தை கொண்டாடும் விதமாக செவிலியா்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலக பொது மேலாளா் சிந்து கே.ஏ, கஸ்தூரிபா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநா் சுமதி, கனரா வங்கியின் உதவி பொது மேலாளா் ஹரேந்திர குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.