விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு அமைக்க விண்ணப்பிக்கலாம்

வடசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு அமைக்க தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :4 நவம்பர் 2024, 11:07 pm

DIN

சென்னை: வடசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு அமைக்க தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடேதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் வடசென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுவில், மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளாக சேர பாா்வையற்றோா், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோா், கை, கால்கள் பாதிக்கப்பட்டோா், மனவளா்ச்சி குன்றியோா் என பலவகைகளில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-29993612 எனும் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.