தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்

Published on

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ.23) கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் நவ. 1-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிா்வாகக் காரணங்களுக்காக இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, நவ. 23-இல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.

கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கிராம மக்கள், கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, நேரம் மற்றும் இடத்தை முறையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநா் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கேற்ப அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com