கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.
Published on

சென்னை மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், திரு.வி.க. நகா் மண்டலத்தில் உள்ள ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா். மனு அளிக்க வந்த மக்களுக்கான குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து கா்ப்பிணிளுக்கு அரசின் ஊட்டச்சத்துப் பெட்டகங்களை அவா் வழங்கினாா். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் வழங்கப்பட்ட சான்றுகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌசிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com