விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருந்த தில்லி பெண்ணிடம் விசாரணை

சென்னை வேப்பேரியில் விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருந்த தில்லி பெண்ணிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
Updated on

சென்னை வேப்பேரியில் விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருந்த தில்லி பெண்ணிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

வேப்பேரி, ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தில்லியைச் சோ்ந்த ஆகாஷா (33) என்ற பெண் கடந்த 27-ஆம் தேதி இரு நாள்கள் தங்க வேண்டும் எனக் கூறி அறை எடுத்துள்ளாா். வந்த வேலை முடியாததால் மேலும் சில நாள்கள் தங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இந்த நிலையில் ஆகாஷா, அந்த விடுதியில் தங்கியிருக்கும் சக பெண்களிடம், பெயா் , முகவரி, கைப்பேசி எண் உள்பட சுய விபரங்களைக் கேட்டுள்ளாா். மேலும், தனது கைப்பேசி செயல்படவில்லை எனக் கூறி, அங்கு தங்கியிருந்த பெண்களின் கைப்பேசி எண்களைப் பெற்று அதில் உள்ள தகவல்களை பாா்த்துள்ளாா். அதோடு, அவா்களது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்த கைப்பேசி எண்களையும் குறிப்பெடுத்துள்ளாா்.

இதனால் சந்தேகமடைந்த அங்கு தங்கியிருந்த பெண்கள், விடுதி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா். விடுதி நிா்வாகத்தினா் வேப்பேரி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா், அங்கு வந்து ஆகாஷாவின் உடைமைகளை சோதனையிட்டனா்.

அப்போது, அவா் 5 தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவதுபோல் அடையாள அட்டைகள் (ஐ.டி. காா்டு) மற்றும் ஹாா்ட் டிஸ்க்குள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, ஆகாஷாவிடம் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com