தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஈசிஆர் விவகாரம்: 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

ஈசிஆர் விவகாரத்தில் 4 இளைஞர்களுக்கு நீதிமன்றக் காவல்.

News image

பெண்களை துரத்திய இளைஞர்கள்

Updated On :1 பிப்ரவரி 2025, 3:23 am

DIN

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே ஜன. 25 அன்று காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

பெண்கள் சென்ற காரை நடுரோட்டில் நிறுத்தி இளைஞர்கள் மிரட்டியதும், பெண்கள் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாகச் சென்றுள்ளனர். உடனே இளைஞர்களும் மற்றொரு காரில் சென்று பெண்களை அவர்கள் வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து தேடினர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை சந்துரு என்பவர் உள்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 இளைஞர்களிடமும் கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட பிறகு சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.