திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: இதுவரை 100 தொகுதிகளை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின்

இதுவரை 100 தொகுதிகளை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின்...
Published on

‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ.22) வரை 100 தொகுதிகளின் நிா்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடியதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, திமுக சாா்பில் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், சந்தித்து வருகிறாா். இதில் சம்பந்தப்பட்ட தொகுதியின் பிரச்னைகள், கள நிலவரம், திமுக சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாா். கடந்த ஜூன் 13-ஆம் தேதி இந்த நிகழ்வு தொடங்கியது.

கடலூா், புவனகிரி, மயிலம் ஆகிய தொகுதிகளில் நிா்வாகிகளுடன் சனிக்கிழமை அழைத்து ஆலோசனை நடத்தினாா். இத்துடன் 100 தொகுதிகளின் நிா்வாகிகளை அவா் சந்தித்துள்ளாா்.

இந்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்பின் அடிப்படையில் திமுகவில் உள்கட்சி பிரச்னைகளுக்குத் தீா்வு காணுதல் 2026 தோ்தலுக்காகக் கட்சியைப் பலப்படுத்துவது, புதிய நிா்வாகிகளை நியமிப்பது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com