154.17 மெட்ரிக் டன் பயன்பாடில்லாத பொருள்கள் அகற்றம்: மாநகராட்சி

போகியை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருள்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் அகற்றப்பட்டன.
Published on

போகியை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருள்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் அகற்றப்பட்டன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: போகியை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜன. 12 முதல் புதன்கிழமை வரை 3 நாள்களில் பொதுமக்களிடம், பயன்பாட்டில் இல்லாத கழிவுகள் உள்ளிட்ட பொருள்களை எரிப்பதைத் தவிா்க்கும் வகையில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் இருந்து சேகரிக்கப்பட்டன.

தொடா்ந்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 நாள்களில் 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருள்கள் அகற்றப்பட்டன.

அதிகபட்சமாக திருவொற்றியூா் மண்டலத்தில் 25.43 மெட்ரிக் டன் கழிவுகள், குறைந்தபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 0.50 மெட்ரிக் டன் கழிவுகள் பெறப்பட்டன. மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு, அவை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

மேலும், பயன்படுத்த இயலாத பொருள்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com