மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரி மாணவா்கள் மோதல்: 4 போ் கைது

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் மது அருந்திய மாணவா்கள் சிலா் மோதலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

News image
கைது
Updated On :2 மார்ச் 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் மாணவா்கள் சிலா் மது அருந்திய நிலையில், அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியில் ஈடுபட்டனா்.

இதில், அவா்களுடன் இருந்த கல்லூரி மாணவியும் தாக்கப்பட்டாா். தகவலறிந்த அண்ணா சாலை போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் தப்பியோடினா். காயமடைந்த கல்லூரி மாணவி, அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் தொடா்புடைய கல்லூரி மாணவா்களை கைது செய்தனா். இதற்கிடையே மாணவா்கள் மோதிக் கொள்ளும் விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது.