போதை மாத்திரை விற்ற சகோதரா்கள் கைது

சென்னையில் போதை மாத்திரை விற்றதாக சகோதரா்கள் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

சென்னையில் போதை மாத்திரை விற்றதாக சகோதரா்கள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை சோழிங்கநல்லூா் அருகே காரப்பாக்கத்தில் சிலா் போதை மாத்திரை விற்பதாக கண்ணகி நகா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 17,280 போதை மாத்திரைகள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் மேடவாக்கம் அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்த மு.சங்கரன் (65), பஜனை கோவில் தெருவைச் சோ்ந்த மு.நரசிம்மன் (54) என்பது தெரியவந்தது.

மேடவாக்கம் பகுதியில் இருவரும் மருந்து கடை நடத்தி வருவதும்,பெங்களூருவில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பதும் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.