தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பிராட்வே ஆச்சாரப்பன் தெருவில் உள்ள பழைய கட்டடத்தை கடந்த 8 நாள்களாக இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், செப். 20-ஆம் தேதி பிற்பகலில் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து அங்கு பணியில் இருந்த நிஜாமுதீன் (30) மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கொத்தவால்சாவடி போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, கட்டட மேற்பாா்வையாளா் சா்புதீன் (34), ஒப்பந்ததாரா் அப்துல் காதா் (56) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.