கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:54 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் இச்சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட 17ஆவது மாநாடு கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களுக்கு நடைபெற்றது. மாநாட்டின் 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கவிஞர் என்.டி.ஆர்.நாதன் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாவட்ட துணைத் தலைவர் மதுர இலக்கியன் பேசினார்.
மாவட்டச் செயலர் இ.சங்கரதாஸ் வரவு-செலவு அறிக்கையையும், மாவட்ட துணைச் செயலர் சுபா கலை-இலக்கிய அறிக்கையையும் வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளர் முத்திருளப்பன், மாநில துணைத் தலைவர் மயிலை பாலு, ருக்கு பாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 
முன்னதாக, கவிஞர் ராக்காச்சி எழுதிய 'இது பொதுவழி அல்ல' என்ற கவிதை நூலை மயிலை பாலு வெளியிட, அரிமா சங்கத் தலைவர் பெ.சதாசிவம் பெற்றுக் கொண்டார். 
மாநாட்டில், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்துக்கு போதிய நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டும்; செங்கல்பட்டு நகரப்பகுதியில் கலையரங்கத்துடன் கூடிய பூங்காவை அமைக்க வேண்டும்; நூலகங்களுக்கு முற்போக்கு நூல்களை வாங்க கூடுதல் நிதியை ஒதுக்கிப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
பின்னர், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி, புதிய தலைவராக சுபா, செயலராக இ.சங்கரதாஸ், பொருளாளராக கவிசேகர், துணைத் தலைவர்களாக வீரன், ஆறுமுகம், துணைச் செயலர்களாக என்.டி.ஆர்.நாதன், முனிசெல்வம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.