மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆடிப்பூர விழாவையொட்டி வரும் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வரும் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, பொதுத்துறை அரசாணை மூலம் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


