
8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு
சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிலோ மீட்டர் தூரம் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, நிலங்களை கையபடுத்தி வந்த நிலையில் உயர்நீதிமன்றம் விவசாயிகள் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை பசுமைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த சில நாள்களாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து, புதன்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு, மாவட்ட வருவாய் அலுவலரிடம் அவர்கள் மனு அளித்து திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






