தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளி சார்பில் தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :5 ஜூன் 2018, 9:18 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளி சார்பில் தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஏ. தனிஸ்வாஸ் சிறப்புரையாற்றி, கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாகங்கள்அடங்கிய அட்டைகளையும் பதாகைகளையும் கையில் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். 
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வழியாக ஜிஎஸ்டி சாலை, பழைய பேருந்து நிலையம் காமராஜ் சிலை வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
பேரணியில் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் சங்கர், அலுவலர்கள் சச்சிதானந்தம், ஜோசப் ஆரோக்கியசாமி, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் ஜேம்ஸ் குழந்தைராஜ், சவுரிமுத்து மற்றும் பள்ளி சாரணர் இயக்கம், செஞ்சிலுவை இயக்கம், பசுமைப் படையினர், செஞ்சிருள் சங்கத்தினர் உள்ளிட்ட மாணவ, மாணவியர் விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.