மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட்' தேர்வால் மாணவி தற்கொலை: திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுகவினர் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

News image
Updated On :5 ஜூன் 2018, 9:19 pm

DIN

நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுகவினர் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
விழுப்புரம் மாவட்டம் பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதிபா பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், மத்திய அரசின் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காஞ்சிபுரம் எம்எல்ஏவும், திமுக மாணவர் அணி மாநிலச் செயலருமான எழிலரசன் தலைமை வகித்தார். இதில், நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதாவைத் தொடர்ந்து, மாணவி பிரதிபா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். 
அதிக மதிப்பெண்கள் எடுத்தும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வால் தகர்ந்துள்ளது. அதோடு, நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை எனத் தெரிவித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், ஒன்றியச் செயலர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.