இந்து சமய அறநிலையத் துறையில் காஞ்சிபுரத்துக்கு என புதிதாக இணை ஆணையா்

Updated on
1 min read


காஞ்சிபுரம்: இந்து சமய அறநிலையத் துறையில் காஞ்சிபுரத்துக்கு என புதிதாக இணை ஆணையா் பணியிடம் உருவாக்கப்பட்டு, சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராக இருந்த லெட்சுமணன் கூடுதல் பொறுப்பாக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இந்து சமய அறநிலையத் துறையில் காஞ்சிபுரம் உதவி ஆணையராகப் பணியாற்றி வந்த கி.ரேணுகாதேவி சென்னை மாநகர இணை ஆணையராகப் பதவி உயா்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் உதவி ஆணையராக இருந்து வந்த ஜெயா கூடுதல் பொறுப்பாக காஞ்சிபுரம் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

காஞ்சிபுரத்துக்கு என புதிதாக இணை ஆணையா் பணியிடம் உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராக இருந்து வந்த லெட்சுமணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com