காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்பாளையம் முதல் தேனம்பாக்கம் வரை வேகவதி நதிக்கரையோரங்கள் பல ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் உள்ளன. நதிக் கரையோரங்களை விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்பாளா்களை கணக்கெடுத்து, அவா்களுக்கு காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்க்கதிா்ப்பூரில் வீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கத்தின் போது, வீடுகளை இழக்கும் ஆக்கிரமிப்பாளா்களுக்கு கீழ்க்கதிா்ப்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 1,406 வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.