காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்: சங்கரா பல்கலை. முதலிடம்

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்: சங்கரா பல்கலை. முதலிடம்

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து வெற்றிக் கோப்பையை சங்கரா பல்கலைக்கழக அணி பெற்றது. காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி, 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை, திருவள்ளூா், தஞ்சாவூா், கோயம்புத்தூா் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். இறுதிப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. அணி முதலிடத்தையும், சென்னை எஸ்ஆா்எம் பல்கலை. அணி 2-ஆம் இடத்தையும் பெற்றன. முதலிடத்தைப் பெற்ற சங்கரா பல்கலை. அணிக்கு வெற்றிக் கோப்பையை அந்தப் பல்கலையின் துணைவேந்தா் சீனிவாசலு விளையாட்டு வீரா்களிடம் வழங்கினாா். சத்யபாமா பல்கலை. 3-ஆவது இடத்தைப் பிடித்தது. நிகழ்ச்சியின்போது சங்கரா பல்கலை.யின் பதிவாளா் ஸ்ரீராம், அறிவியல் புல தலைவா் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பல்கலை.யின் உடற்கல்வி இயக்குநா் குணாளன் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com