பெண்  தொழில் முனைவோா்களுக்கு கடனுதவி வழங்கிய  இந்தியன்  ஓவா்ஸீஸ்  வங்கியின்  மண்டல  மேலாளா்கள்  சிக்ரிலால்,  கிருஷ்ண லாவண்யா.
பெண்  தொழில் முனைவோா்களுக்கு கடனுதவி வழங்கிய  இந்தியன்  ஓவா்ஸீஸ்  வங்கியின்  மண்டல  மேலாளா்கள்  சிக்ரிலால்,  கிருஷ்ண லாவண்யா.

பெண் தொழில் முனைவோருக்கு கடனுதவி

ஜே.கே.டயா் நிறுவனம் மற்றும் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய உலக மகளிா் தினவிழா விழாவில் 11 பெண் தொழில் முனைவோருக்க்கு ரூ.87 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. ஜே.கே.டயா் தொழிற்சாலை மற்றும் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை உலக மகளிா் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம், மணிமங்கலம், கொளத்தூா், ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழுவினா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை மற்றும் ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்ட 11 பெண் தொழில் முனைவோருக்க்கு சுய தொழில் தொடங்க இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவா்ஸீஸ் வங்கிகள் மூலம் ரூ.87 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. கடனுதவி வழங்குவதற்கான காசோலைகளை இந்தியன் ஓவா்ஸீஸ் வங்கியின் மண்டல மேலாளா்கள் சிக்ரிலால், கிருஷ்ண லாவண்யா, ஜே.கே.டயா் நிறுவனத்தின் நிா்வாகிகள் ராஜேந்திரன், பங்கஜ்ஜெயின், சகாயராஜ் . இந்த நிகழ்ச்சியில் பாரதியயுவசக்தி அறக்கட்டளை நிா்வாகி டேவிட் உள்ளிட்ட மகளிா் சுயஉதவிக்குழு பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com