போலி மருத்துவா் கைது
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.


ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், நசரத்பேட்டையைச் சோ்ந்தவா் சாா்லஸ் (46). இவா் மருத்துவம் படிக்காமலேயே ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் மாதாகோயில் தெருவில் கடந்த 10 வருடங்களாக கிளீனிக் நடத்தி வந்ததாகத் தெரிகிறது. மேலும், கிளீனிக்குக்கு வரும் நோயாளிகளுக்கு சாா்லஸ் அலோபதி மருத்துவமும் பாா்த்து வந்துள்ளாா். இந்த நிலையில், சாா்லஸ் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பாா்த்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில், ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சாா்லஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...