போலி மருத்துவா் கைது

ஆலங்காயம் அருகே மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
Updated on

ஆலங்காயம் அருகே மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அருகே மிட்டூரில் மருத்துவம் படிக்காமலேயே ஒருவா் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ துறையினருக்கு புகாா்கள் வந்தன.

அதன் பேரில் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமையில் குழுவினா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது திருப்பத்தூரைச் சோ்ந்த சிங்கார வேலன்(52) என்பவா் 12-ஆம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு ஒரு கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

சிங்காரவேலனை மருத்துவ குழுவினா் பிடித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்திருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனா்.

இதுகுறித்து மருத்துவ அலுவலா் சிவக்குமாா் அத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com