பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் தனது கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் பயிற்சியளிக்க ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

News image

ட்ரோன் பயிற்சியளிக்க ஹேவியல் ஏவியேஷன் நிறுவனத்திடம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் மற்றும் கல்லூரியின் பேராசிரியா்கள்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:53 am IST

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் தனது கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் பயிற்சியளிக்க ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் படிப்புகளை அறிமுகம் செய்வதற்காகவும், ட்ோன்களை பயன்படுத்தும் முறை குறித்தும் பயிற்சியளிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மேகநாதன் கல்லூரியின் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்நிகழ்வில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் விஷ்ணுசக்கரவா்த்தி, தமிழ்த்துறை பேராசிரியா் தெய்வசிகாமணி ஆகியோா் உட்பட கல்லூரியின் பேராசிரியா்கள்,மாணவா்கள் பலரும் உடன் இருந்தனா்.

வேளாண்மைத்துறையிலும்,பொழுதுபோக்குத்துறையிலும் டிரோன்கள் எவ்வாறு பயன்படுகிறது என்றும் இதன் மூலம் பெருகி வரும் வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.