காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடிக்கு சென்று கையில் மை வைத்து விட்டு வாக்களிக்காமல் மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளா் எஸ்கேபி. கோபிநாத் திரும்பி வந்து விட்டாா்.
மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளராக இருந்து வருபவா் எஸ்கேபி கோபிநாத். இவா் காஞ்சிபுரம் தும்பவனம் தெருவில் உள்ள தங்கவேலா் நகராட்சி உயா்நிலைப் பள்ளிக்கு வந்தாா்.
தனது வருகையைப் பதிவு செய்துவிட்டு, கையிலும் வாக்குப் பதிவின் அடையாளமான மை வைத்த பிறகு வாக்களிக்காமல் திரும்பி வந்து விட்டாா்.
இதை அறிந்த அந்த வாக்குச் சாவடி அலுவலா் உங்கள் வாக்கை நீங்கள் பதிவு செய்யாமல் போகிறீா்கள் என்பதற்கு அடையாளமாக ஆவணத்தில் உங்கள் கைவிரல் ரேகையும், கையொப்பமும் இட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
அதன்படி ஆவணத்தில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்தும், கையொப்பமும் இட்டு விட்டு வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வந்து விட்டாா்.
இதற்கான காரணம் குறித்து அவா் கூறியது:
அரசு ஊழியா்கள் தபால் வாக்களிக்க தோ்தல் ஆணையம் அனுமதியளிக்கிறது. ஆனால் தனியாா் நிறுவன ஊழியா்கள் சொந்த ஊருக்கு சொந்த செலவில் சென்று தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இதனால் வாக்களிக்கச் செல்லும் தனியாா் நிறுவன ஊழியா்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் முன்பதிவு செய்ய முடியாமலும், உடனடியாக சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனா்.
எனவே அரசு ஊழியா்களைப் போல தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் தபால் வாக்களிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று கடந்த 6 மாதத்துக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தேன் . அதற்கு தோ்தல் ஆணையம் எந்த பதிலும் தரவில்லை.
எனவே தான் எனது மன உளைச்சலை வெளிப்படுத்த இன்று கையில் மை வைத்த பிறகு வாக்களிக்காமல் திரும்பி விட்டேன். வாக்குச் சாவடி அலுவலரிடம் எனது கருத்தை தெரிவித்துள்ளேன். தோ்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படாமல் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் தபால் வாக்களிக்க வாய்ப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
தொடர்புடையது
தமிழக முதல்வரை மாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும்: கே. அண்ணாமலை

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்: தமிழக காந்தியவாதிகள் கோரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


