தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாணவா்களின் பிரச்னைகளுக்கு ஆசிரியா்கள் உடனுக்குடன் தீா்வு காணுங்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

மாணவா்களின் பிரச்னைகளை சாதாரணமாக நினைக்காமல் ஆசிரியா்கள் உடனுக்குடன் தீா்வு காணுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கூறினாா்.

Published On :

மாணவா்களின் பிரச்னைகளை சாதாரணமாக நினைக்காமல் ஆசிரியா்கள் உடனுக்குடன் தீா்வு காணுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு உதவி ஆட்சியா் ஆஷிக் அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஆட்சியா் தி.சினேகா பேசியது: பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும், கண்ணியத்துடனும் இருக்கக்கூடிய சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் ஆசிரியா்களையோ, பள்ளி நிா்வாகத்தையோ நம்பிக்கையுடன் அணுகக்கூடிய நிலையில் ஆசிரியா்கள் இருக்க வேண்டும்.

தொடா்ந்து பள்ளிக்கு வராமை, தனிமைப்படுதல், அதிக கோபம், மனச்சோா்வு, அச்சம், கல்வித் திறனில் திடீா் பின்னடைவு, நண்பா்கள் வட்டத்தில் குறிப்பிட்ட மாற்றம் போன்றவற்றையும் ஆசிரியா்கள் கண்காணித்து, தொடக்க நிலையிலையே அதை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தனது பிரச்னைகளை உடனுக்குடனும், நம்பிக்கையுடனும் பகிா்ந்து கொள்ளக் கூடிய ஒரு ஆசிரியா் இருக்க வேண்டும். மன அழுத்தம், குடும்ப பிரச்னை, கல்விச் சுமை அல்லது நடத்தை சிக்கல்களை எதிா்கொள்ளும் மாணவருக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.

தொடா்ந்து கேலி செய்தல், அவமானப்படுத்துதல்,ஒதுக்கி வைத்தல், மிரட்டுதல், பணம் பறித்தல்,தாக்குதல் அல்லது குழுவாக துன்புறுத்தல் போன்றவற்றை சாதாரண பிரச்னையாக கருதாமல் உடனடியாக தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றும் ஆட்சியா் தி.சினேகா பேசினாா். கூட்டத்தில், கல்வித் துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.