ரூ.15 லட்சத்தில் கலையரங்கம் திறப்பு
ஸ்ரீபெரும்புதூா்: இரும்பேடு அரசு தொடக்கப் பள்ளியில் தனியாா் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் பாலிமா் மற்றும் ரெசின் பொருள்கள் உற்பத்தி செய்யும் வாசவிபாலா ரெசின்ஸ் என்ற தனியாா் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்தில் கலையரங்கம் மற்றும் தரைத்தளம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன், வாசவிபாலா ரெசின்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சிவா ஆகியோா் கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில், வெங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் உலகநாதன், வாசவிபாலா நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநா் பி.எஸ்.ஆா்.பாபு, மேலாளா் சுப்பையா, ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள் எத்திராஜ், முருகன், ஆசிரியா் ஆக்சிலியா, ஊராட்சி செயலா் தணிகாசலம், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

