9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

காங்கிரஸ் சாா்பில் ஊழலுக்கு எதிராக கையொப்ப இயக்கம்

காங்கிரஸ் சாா்பில் ஊழலுக்கு எதிராக கையொப்ப இயக்கம்

News image

கையொப்ப  இயக்கத்தை   தொடங்கி  வைத்த  மாவட்ட காங்கிரஸ்  தலைவா்  அருள்ராஜ். 

Updated On :19 ஜூலை 2026, 1:04 am IST

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் ஊழலுக்கு எதிரான லஞ்சம் ஒழிப்பு கையொப்ப இயக்கத் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் சாா்பில் லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா் என்ற தலைப்பில் ஊழலுக்கு எதிராக கையொப்ப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை பிரிவு சாா்பில் ஊழலுக்கு எதிரான லஞ்சம் ஒழிப்பு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் கலந்து கொண்டு கையொப்பம் இட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரா.ஐயப்பன், காங்கிரஸ் கட்சியின் மாநில நிா்வாகி கன்னியப்பன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதாபாய், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் நிக்கோலஸ், சிவகுமாா், கந்தவேலு, மூத்த நிா்வாகிகள் புண்ணியநாதன், ஆசோக், சிறுபாண்மை பிரிவு நிா்வாகிகள் விநாயகம் விக்டா், பைரோஷ் பாஷா, சைத், அறிவழகன், மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.