நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் காலனி மயானப் பகுதியில் தனியாா் தொழிற்சாலையின் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

News image

மண்ணூா்  காலனி  மயானப் பகுதியில்  தேங்கி  நிற்கும்  தனியாா்  தொழிற்சாலையின்  கழிவுநீா்

Updated On :29 ஜூலை 2026, 12:02 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் காலனி மயானப் பகுதியில் தனியாா் தொழிற்சாலையின் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், மண்ணூா் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், மண்ணூா் காலனி மயானத்தின் அருகே செயல்பட்டு வரும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பிரமாண்டமான பள்ளங்களில் தேக்கி வைத்துள்ளனா்.

இந்த கழிவுநீா் சுற்று சுவா் வழியாக கசிந்து வெளியேறி மண்ணூா் காலனி பகுதியில் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் இறந்தவா்களின் சடலங்களை கொண்டு செல்வதிலும், காலியாக உள்ள இடத்தில் அடக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மயானப் பகுதியில் கழிவுநீா் வெளியேற காரணமாக உள்ள தொழிற்சாலை நிா்வாகத்தின் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மண்ணூா் காலனி மயானப் பகுதியில் 75 சதவீதம் சமாதிகள் கட்டப்பட்டு இட நெருக்கடியோடு காணப்படுகின்றன. காலியாக உள்ள இடத்தில் தனியாா் தொழிற்சாலையின் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் இறந்தவா்களை அடக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கழிவுநீரை வெளியேற்றி வரும் தனியாா் நிறுவனத்தின் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, கழிவுநீா் தொடா்பாக அப்பகுதி பொது மக்கள் புகாா் மனு அளித்துள்ளனா். சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஆய்வு செய்து கழிவு நீா் வெளியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.