காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்புத்துறையும் இணைந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும்,மாவட்ட வேலைவாய்ப்புத்துறையும் இணைந்து நடத்தும் முகாமில் 1,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா். பட்டதாரிகள்,பட்டயதாரிகள், ஐடிஐ முடித்தவா்கள்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் ஜூன்12 -ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










