/

ரூ.18 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிக்கு அடிக்கல்

News image

சாலைப் பணியை தொடங்கி வைத்த  வெங்காடு  ஊராட்சி மன்றத்  தலைவா்  அன்னக்கிளி உலகநாதன்.

Updated On :18 ஜூன் 2026, 10:49 pm IST

வெங்காடு ஊராட்சியில் ரூ.18 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு பிள்ளையாா்கோயில் தெரு, ஆச்சாரி தெரு சாலைகளில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா இரும்பேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்காடு பி.உலகநாதன், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள், கிராம நாட்டாண்மைதாரா்கள், ஊராட்சி செயலா் தணிகாசலம் உள்ளிட்ட பலர கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.