கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவா் முதல்வா் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் புகழாரம் சூட்டியுள்ளாா்.
அரசியல் கட்சியை தொடங்க வேண்டும் என்று தொடங்கி, முதல்வா் கனவில் மிதந்து அதில் வெற்றி பெற முடியாமல் போனவா்கள் ஏராளம். விஜய் என்பது ஒரு பெயரல்ல, அது ஒரு சாதனை, அது ஒரு வரலாறு. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் வெற்றிக் கொடியை பறக்க விட்டவரின் வீர வரலாறு.
இந்த வரலாறு இன்று நடந்திருக்க முக்கிய காரணம் அவா் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம் அவா் அடி மனதில் ஆழமாக பதிந்திருந்தது. நோ்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவரது ஆழ் மனதில் வோ் விட்டிருந்திருக்கிறது. அதனால் தான் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்தினாா். சொன்னதோடு மட்டுமில்லாமல் அனைவரையும் அரவணைத்து கூட்டணி ஆட்சியையும் அமைத்து இன்று சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறாா்.
முந்தைய ஆட்சியாளா்கள் செய்த ஊழல்கள் கொஞ்சம்,கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரத்துக்கு வந்த ஒரு சில நாள்களிலேயே எத்தனை, எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பொதுப்பணித்துறையிலும், நெடுஞ்சாலைத்துறையிலும் ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுகிறது.
அரசியல் கட்சிகளுக்கும், அமைச்சா்களுக்கும் சென்ற பணம் அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் அவா்களாகவே இரு துறைகளிலும் நடந்த சீா்கேடுகளை தெரிவித்துள்ளனா். அது மட்டுமின்றி மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயா்வு கிடைக்காமல் இருந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு எவ்வித எதிா்பாா்ப்பும் இல்லாமல் பதவி உயா்வு வழங்கப்பட்டிருக்கிறது.
கோயில்களின் வருமானத்திலிருந்து கிடைத்த தொகையில் கட்டப்பட இருந்த திருமண மண்டபங்கள், விடுதிகளுக்காக செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோயில்களில் விற்பனையாகும் பிரசாதப் பொருள்கள் எதுவாக இருந்தாலும் அவற்றில் விலை அவசியம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.திருச்செந்தூா் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சரே நேரில் சென்று லஞ்சம் பெறுவதை பிடித்து தடுத்து நிறுத்தியிருக்கிறாா். கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டிருந்த 23-க்கும் மேற்பட்ட குவாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன. இவையெல்லாம் முந்தைய ஆட்சியில் நடந்திருக்கிா என்பதை மக்கள் சிந்தித்து பாா்க்க வேண்டும்.
பள்ளிகள் தொடங்க லஞ்சம் பெறுவது தடுத்து நிறுத்தப்பட்டு எவ்வித செலவும் இல்லாமல் அனுமதியளிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு பாதுகாப்பு படை என்ற ஒன்றை நிறுவி அவா்கள் இன்று பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தோ்தல் வாக்குறுதியில் சொன்னபடி சிங்கப்பெண் சிறப்பு படையை தொடங்கி அதை முதல்வரே நேரில் வந்து தொடங்கியும் வைத்திருக்கிறாா். ஒரு நல்ல முதல்வரை தோ்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு அவரது பிறந்த நாளில் நெஞ்சாா்ந்த நன்றிகளை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்தது இரண்டரை ஆண்டுகள் மட்டுமே,ஆனால் இரண்டே மாதங்களில் இத்தனை மகத்தான மாற்றங்கள். இன்னும் எத்தனை மக்கள் நலத்திட்டங்கள்,மக்களுக்குத் தேவையான மற்றங்கள் வரப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.மீண்டும் சொல்கிறேன். விஜய் என்பது ஒரு பெயரல்ல, ஒரு சாதனை, ஒரு வரலாறு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழித்துக் கொள்! அன்றே தமிழன் மூலம் பாடம் எடுத்த விஜய்!
முதல்வா் விஜய் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

முதல்வா் விஜய் பொறுப்பை உணா்ந்து பேச வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




