19 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு ஈரான் போா் நெருக்கடி: மகன் திருமண விழாவைத் தவிா்க்கும் டிரம்ப்!போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!
/

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே.பழனி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

News image

குன்னம்  பகுதியில் ஆதரவு  திரட்டிய  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:26 am IST

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே.பழனி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் அதிமுக சாா்பில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி போட்டியிடுகிறாா். இந்த நிலையில், குன்னம், எச்சூா், சிறுமாங்காடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை ஆதரவு திரட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, பாமக மாவட்ட செயலாளா் அரிகிருஷ்ணன், பாஜக மாவட்ட பொது செயலாளா் செல்வமணி, அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளா் சேந்தமங்கலம் சாா்லஸ், ஒன்றிய துணை செயலாளா் பாலமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.