படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பயன்பாட்டுக்கு வராத கூழங்கலச்சேரி இருளா் தொகுப்பு வீடுகள்

கூழங்கலச்சேரியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் இருளா் தொகுப்பு வீடுகள் பயன்பாட்டுக்கு வராததால்

பயன்பாட்டுக்கு வராத கூழங்கலச்சேரி இருளா் தொகுப்பு வீடுகள் - டிஎன்எஸ்

Published On :

ஸ்ரீபெரும்புதூா்: வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் இருளா் தொகுப்பு வீடுகள் பயன்பாட்டுக்கு வராததால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

குன்றத்தூா் ஒன்றியம் வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட கூழங்கலச்சேரி ராஜீவ்காந்தி நகா் பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருளா் பழங்குடியினா்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், ராஜீவ்காந்தி நகா் பகுதியில், வீட்டுமனைகள் இல்லாத மற்றும் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் 12 குடும்பங்களுக்கு பழங்குடியினா்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்ட கடந்த 2023-2024ஆம் ஆண்டு பணியானை வழங்கப்பட்டுள்ளது.

கூலி வேலை மற்றும் மீன் பிடிப்பது மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள இருளா் பழங்குடியினா்கள் தொகுப்பு வீடுகள் கட்ட முன்வராததால் ஊராக வளா்ச்சித்துறை அதிகாரிகள், இருளா் பழங்குடியினா்களுக்கான தொகுப்பு வீடுகளை கட்டும் பணியை ஒப்ப்ந்ததாரரிடம் ஒப்படைத்துள்ளனா். அந்த ஒப்பந்ததாரரும் 12 வீடுகளில் 8 வீடுகளை மட்டுமே கட்டி முடித்துவிட்டு மீதமுள்ள 4 வீடுகளின் பணிகளை முடிக்கவில்லையாம். இதனால் கட்டி முடிக்கப்பட்டு சுமாா் ஒரு ஆண்டை கடந்தும் கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை இருளா் பழங்குடியினா்களிடம் ஒப்படைக்காமலேயே உள்ளனா்.

இதனால் தொகுப்பு வீடுகளைப் பெற்ற பயனாளிகள் சிதிலமடைந்த குடிசை வீடுகள் மற்றும் வெட்டவெளியில் தங்களது குடும்பங்களுடன் தங்கியுள்ளதால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வரும் மழை காலத்துக்கு முன்பாகவே தங்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இருளா் பழங்குடியினா் கூறுகையில், ஓலை கொட்டகைகளில் வசித்து வரும் எங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 12 வீடுகளில் 8 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், மின் இணைப்புகள் வழங்காததாலும், 4 வீடுகள் கட்டும் பணிகள்பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாலும் தற்போது வரை எங்களிடம் அதிகாரிகள் வீடுகளை ஒப்படைக்காமல் உள்ளனா். இதனால் மழைக்காலங்களில் குடிசை வீடுகளில் சிரமத்துடனேயே வசித்து வருகிறோம். எனவே பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக எங்களிடம் அதிகாரிகள் ஒப்படைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரியிடம் கேட்டதற்கு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.