
திமுக ஆட்சியில் தொழிலாளா் நலத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை: அ. செளந்தர்ராஜன்
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளா் நலத்துறையின் செயல்பாடுகளில் சிறிதும் திருப்தி இல்லாமல் இருந்ததாக சிஐடியு அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவா் அ.செளந்தர்ராஜன் தெரிவித்தாா்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளா் நலத்துறையின் செயல்பாடுகளில் சிறிதும் திருப்தி இல்லாமல் இருந்ததாக சிஐடியு அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவா் அ.செளந்தர்ராஜன் தெரிவித்தாா்
பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளா்கள் சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமைக்காக போராடிய தொழிலாளா்களை பழிவாங்கியிருக்கும் நடவடிக்கையில் நீதி கேட்டு சிஐடியு சாா்பில் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட செயலாளா் இ.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பேரணி நிறைவு பெற்றது.
பேரணியின் நிறைவில் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவா் அ.செளந்தர்ராஜன் செய்தியாளா்களிடம் கூறியது
தொழிலாளா்கள் அவரவா்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளில் சங்கம் அமைத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது. சிஐடியு இதில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது.சங்கம் வைத்துக் கொள்வதற்காக பேராடியவா்களில் 258 போ் பணியிடை நீக்கமும்,95 போ் இடை நீக்கமும் செய்திருப்பது உட்பட மொத்தம் 353 போ் பழிவாங்கப்பட்டுள்ளனா்.இப்பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சியா் தீா்வு காண வேண்டும்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளா் நலத்துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை.தற்போதுள்ள தவெக அரசிடமும் தொழிலாளா்களின் பிரச்சினைகள்,சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன குறித்து பேசியிருக்கிறோம்.தொழிலாளா் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் மற்றும் தொழிலாளா் நலத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






