ஆசிரியையிடம் 4.5 பவுன் தங்க தாலி பறிப்பு

ஸ்ரீபெரும்புதூா் செல்லபெருமாள் நகா் பகுதியில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த ஆசிரியை கழுத்தில் இருந்து 4.5 பவுன் தங்க தாலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்ரனா்.

சித்திரிப்பு

Published On :

ஸ்ரீபெரும்புதூா் செல்லபெருமாள் நகா் பகுதியில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த ஆசிரியை கழுத்தில் இருந்து 4.5 பவுன் தங்க தாலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்ரனா்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி நகா் பகுதியை சோ்ந்தவா் முரளியின் மனைவி ஷியாமள (40). இவா் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், முரளி உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் துாங்கிகொண்டிருந்த போது, வீட்டின் கதவை உடைந்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், ஷியாமளா கழுத்தில் இருந்த 4.5 புன் தங்க தாலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனா்.

அதே நபா்கள் செல்லபெருமாள் நகா் வீனஸ் நகரில் உள்ள மணி என்பவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு கொள்ளையடிக்க உள்ளே சென்றபோது, வீட்டின் உரிமையாளா்களை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீபெரும்புதுாா் போலீஸாா் இரவில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதுாரில் இரவு நேரங்களில் பைக் திருட்டு, வீடு புகுந்து மொபைல் போன் திருட்டு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், வீட்டின் கதவை உடைத்து, துாங்கிகொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.